தமிழ் -தோறும் யின் அர்த்தம்

-தோறும்

இடைச்சொல்

  • 1

    (பெயர்ச்சொல்லின் பின்) ‘குறிப்பிட்ட காலத்தில் அல்லது இடத்தில் ஒன்று காணப்படுகிறது அல்லது தவறாமல் நடக்கிறது’ என்பதைக் காட்டுவதற்குப் பயன்படும் இடைச்சொல்.

    ‘வாரந்தோறும் அம்மாவைப் பார்க்க ஊருக்குச் சென்றுவிடுவான்’
    ‘வியாழன்தோறும் இங்கு விசேஷ பூஜை நடத்தப்படும்’
    ‘இது பொதுவாக வீடுதோறும் இருக்கக் கூடிய பிரச்சினைதான்’