தமிழ் -போது யின் அர்த்தம்

-போது

இடைச்சொல்

  • 1

    (பெயரெச்சத்தின் பின் வரும்போது ஒரு செயல் நிகழ்கிற அல்லது செய்யப்படுகிற) ‘காலத்தில்’ என்ற பொருளில் பயன்படும் இடைச்சொல்; ‘(அந்த) தருணத்தில்’.

    ‘படிக்கிறபோது தொந்தரவு செய்யாதே!’
    ‘தாத்தா தூங்கும்போதுகூடக் கண்ணாடியைக் கழற்றமாட்டார்’
    ‘உனக்குக் கடிதம் எழுதியபோது இது நினைவுக்கு வரவில்லை’